சிபிஐ(எம்) வலியுறுத்தல்! கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. யில் நிரந்தர தொழிலாளர்கள்,பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 30,000 பேர் பணியாற்றி வருகிறார்கள். அனல் மின்நிலையம், சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து, ஆண்டுக்கு ரூபாய் 1,000 கோடி லாபம் ஈட்டும் நவரத்னா நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. சமீப நாட்களில் இந்நிறுவனத்தை பற்றி வரும் செய்திகள் கவலை அளிப்பதாக உள்ளன. நிறுவனத்திற்கான ...
Read More »தொழிலாளிகளின் உயிர் பாதுகாப்பில் சிக்கனத்தை கடைபிடிக்கும் என்எல்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
07.05.2020 அன்று என்எல்சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஆறாவது பாய்லர் வெடித்து இதுவரை 4 தொழிலாளிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள்; இதர 4 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள்; வேறு பலர் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும், முழுமையான ஆதரவையும் தெரிவிப்பதோடு, இந்தத் துயரத்துக்கு என்எல்சி நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. கடந்த கால விபத்துகளிலிருந்து நிர்வாகம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. 2016ல் 5வது பாய்லரும், 2019ல் 6வது பாய்லரும் ...
Read More »என்.எல்.சி தொழிலாளர் காலவரையற்ற வேலை நிறுத்தம் – மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 12300 தொழிலாளர்களும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்துடன் போடப்பட்டிருந்த ஊதிய ஒப்பந்தம் 2011 டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், என்.எல்.சி நிர்வாகம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இதுவரை முன்வரவில்லை. இதன் காரணமாக என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ...
Read More »