Tag Archives: NPR

வடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று நீதிமன்றத்தில் கூறிக்கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், தில்லிக் காவல்துறை ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் தில்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட வர்கள் எண்ணிக்கையில் ஆழமான முறையில் தவறு இருப்பதைத் தங்கள் ...

Read More »

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, ஜேஎன்யு மாணவர்களான நடாஷா நர்வால், தேவங்கானா கலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், ஜமியா மிலியா இஸ்லாமியா மாணவர்கள் மீரான் ஹைதர், அஷிப் தன்ஹா, சஃபூரா ...

Read More »

பிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் ...

Read More »

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

Read More »

மார்ச் 9 அன்று கோட்டை முன்பு சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் 03.03.2020 அன்று சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மார்ச் 9 அன்று கோட்டை முன்பு சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., ஆகியவற்றை எதிர்த்து தொடர் இயக்கங்கள் இந்திய ...

Read More »

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்! மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம்! நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் - சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்...

Read More »

தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்துவிட்டால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்பட்டுவிடும் என்கிற காரணத்தினால், தேசத்தின் நலன், சமூக நல்லிணக்கம், அரசியல் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, கேரளா, மேற்குவங்க மாநில அரசாங்கங்களைப் போல தமிழக அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

Read More »