Tag Archives: OBC

வங்கிப் பணிகளில் SC/ST/OBC இட ஒதுக்கீட்டு இடங்கள் மோசடியாக பறிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு சட்டம் இயற்றியபோது, இதனால் ஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நலன்கள் பாதிக்கப்படாது என தெரிவித்தது. பொதுப் பிரிவில் இருந்தே, பொருளாதாரத்தில் நலிந்த இட ஒதுக்கீட்டுக்கான இடங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், பயிற்சி அதிகாரிகளை தேர்வு செய்ய வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து 10 சதவீத இடங்களை மோசடியாக குறைத்து அவற்றை ...

Read More »

பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக்கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது! கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்!!

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன்?, இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் திரு. கோ.க. மணி அவர்கள் ...

Read More »

மருத்துவ படிப்பிற்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் பிற்படுத்தப்பட்ட மக்களை மத்திய பாஜக அரசு பழிவாங்குவது ஏன்?

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையில் தொடர்ந்து மத்திய பாஜக அரசு சண்டித்தனம் செய்து வருகிறது. இதேபோல ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாணவர் சேர்க்கையில் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையை முழுமையாக அமல்படுத்த மறுத்து வருகிறது. உதாரணமாக, 2015 முதல் 2019 ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மொத்தம் உள்ள 25,007 இடங்களில் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு ...

Read More »

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி தமிழக அரசும் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இளநிலை படிப்பில் 15 சதமான இடங்களையும், முதுநிலை படிப்பில் 25 ...

Read More »

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென அறிவித்தது. இதனை எதிர்த்து, இந்திரா சஹானி என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்படோருக்கான 27 சதமான இடஒதுக்கீட்டை செயல்படுத்திட வேண்டுமென தீர்ப்பளித்தது. அதே சமயம் இந்த சலுகையினை பெறுவதற்கு வருமான வரம்பினை (கிரிமிலேயர்) தீர்மானிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன்படி வருமான வரம்பினை தீர்மானிப்பதற்கு நீதிபதி ராம் நந்தன் பிரசாத் அவர்கள் ...

Read More »

மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC இட ஒதுக்கீட்டுக்கான சமூக நீதியை நிலை நாட்ட வலியுறுத்தி பிரதமருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்         உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள்,         இந்திய பிரதமர்,         புதுதில்லி. உயர்திரு இந்திய பிரதமர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-    மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை ஒதுக்கீடு – சமூக நீதியை நிலை நாட்ட வலியுறுத்துவது தொடர்பாக… பின்வரும் பிரச்சனையைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதோடு, அதனைத் தீர்த்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு முறை அமலாக்கப்பட்ட காலத்திலிருந்து முதுநிலை பாடப் பிரிவிற்கான சேர்க்கைகளில் இதர ...

Read More »

இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓ.பி.சி, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ...

Read More »