Tag Archives: Pinarayi Vijayan

இடது ஜனநாயக முன்னணியைப் பொய்களால் வீழ்த்திட முடியாது!

கொடியேரி பாலகிருஷ்ணன் கேரள மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆயிரம் நாக்குகள் உள்ள அனந்தனின் நாவுகளைக் கடன் வாங்கினாலும் பாஜக-காங்கிரஸ் தலைவர்களால் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடியவில்லை. மடியில் கனமில்லாததால் இந்த அரசும், இதை இயக்குகிற சாரதிகளும் எவர் முன்னாலும் அஞ்சவோ, மண்டியிடவோ வேண்டிய அவசியமில்லை. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம் கடத்தல் வழக்கு மிகத் தீவிரமானதும், சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். ஐக்கிய அரபு எமிரேட் தூதரகப் பெயரின் மறைவில் வந்த ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »

தந்திரியின் சொத்து அல்ல சபரிமலை! – தோழர் பினராயி விஜயன்

பத்தனம்திட்டாவில் நடந்த இடது ஜனநாயக முன்னணி அரசியல் கொள்கை விளக்க கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வரும், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பினராயி விஜயன் பேசியதாவது; சபரிமலையில் தந்திரிகளுக்கல்ல, தேவசம் போர்டுக்கே அதிகாரம் உள்ளது. தங்களது இடுப்பில் கட்டியிருக்கும் சாவியின் மேல் அதிகாரம் முழுவதும் உள்ளதாக தப்புக்கணக்கு போட வேண்டாம். சபரிமலை நடை அடைப்பதும் திறப்பதும் தந்திரிகளின் உரிமையல்ல. சபரிமலை தந்திரியின் சொத்தல்ல. சபரிமலை உள்ளிட்ட இதுபோன்ற கோயில்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் சொத்துக்களாகும். இதையெல்லாம் தந்திரி புரிந்து கொண்டால் நல்லது. ஆந்திர ...

Read More »

சமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து… சமூக சீர்திருத்த மரபுதான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழிநடத்தப்பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்”, என்று விவேகானந்தரால் விமர்சிக்கப்பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாக முன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை ...

Read More »

ஒக்கி புயல் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யுங்கள் – பினராயி விஜயன்

ஒக்கி புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையை ஒரே தவணையில் வழங்க முடிவு செய்துள்ளதாகவும், அமைச்சர்கள் ஒருமாத சம்பளத்தை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன் இந்த துயரத்தை துடைக்க அனைவரும் நிதிஉதவி செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். காணாமல் போனவர்களை தேடும் பணி கடலில் தொடர்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது: உயிரிழந்தோருக்கு பத்து லட்சம் ரூபாய் அரசும், பத்து லட்சம் ரூபாய் ...

Read More »

கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மோடி அரசின் 40 மாத கால ஆட்சி என்பது அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு எதிராகவும், பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் கடும் கோபம் எழுந்துள்ளது. பல்வேறு தேர்தல் முடிவுகள் இதை உணர்த்துகின்றன. குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பாஜக பதற்றம் அடைந்துள்ளது. மோடி அரசின் மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை மார்க்சிஸ்ட் ...

Read More »

கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை ...

Read More »

வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட ஊழல் வழக்கில் நீதியின் வெற்றி

கேரள உயர்நீதிமன்றம் லாவ்லின் வழக்கில் தெரிவித்துள்ள தீர்ப்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு சரி என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. என்என்சி லாவலின் வழக்கில் பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பது நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாகியுள்ளது. பினராயி விஜயனை, சிபிஐ வேண்டுமென்றே குறிவைத்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முழுமையாக நிராகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களின் பிம்பத்தை சிதைப்பதற்காக லாவ்லின் வழக்கு பயன்படுத்தப்பட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு அதனை அம்பலப்படுத்தியுள்ளது.

Read More »

தமிழும் கன்னடமும் பயிற்று மொழியாக தொடரும் – பினராயி விஜயன்

கேரளத்தில் வாழும் தமிழ் மற்றும் கன்னட மக்களின் பிரச்சனைகளை ஆராய கேரள அரசு உறுதி தெரிவித்துள்ளது. மொழிவழி சிறுபான்மையினரின் நலன்களை பாதிக்காத வகையிலேயே மலையாள மொழிச் சட்டம் அமலாக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலையாளம் தாய் மொழியாக இல்லாத குழந்தைகளுக்கு, மலையாள மொழிப் பாடம் கூடுதலான ஒன்றாகவே இருக்கும். மொழிவழி சிறுபான்மையோர் வசிக்கும் பகுதிகளில் தமிழ் அல்லது கன்னடம் பயிற்று மொழியாக இருக்கும். இடுக்கியிலும், பாலக்காட்டிலும் தமிழ் பேசும் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காசர்கோட்டில் கன்னடர்கள் வாழ்கின்றனர். மொழிவாரி சிறுபான்மை ...

Read More »

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வீழ்த்த முடியாதவை அல்ல…

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வீழ்த்த முடியாதவை அல்ல. பஞ்சாபில் பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது, மணிப்பூரிலும், கோவாவிலும் ஜனநாயகமற்ற வழிகளில்தான் ஆட்சியமைக்கிறது பாஜக. உத்திரப் பிரதேசத்திலும் கூட 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் பாஜகவுக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர். நாம் இந்த வெற்றி தொடரும் என்று நினைக்க வேண்டியதில்லை. காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் கைகோர்த்ததன் மூலம்தான் கோவாவிலும், மணிப்பூரிலும் பாஜக ஆட்சியமைக்கிறது. வரலாற்றின் நெடுகிலும், காங்கிரஸ் கட்சி வகுப்புவாதத்திற்கு எதிராக மிக மென்மையாக நடந்து கொண்ட சம்பவங்களைச் சொல்ல முடியும். தான் ஒரு மதச்சார்பற்ற கட்சி ...

Read More »