Tag Archives: railway

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

ரயில்வேதனியார்மயம்: சுய சார்பு அல்ல, சுய அடிமைநிலைமார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கண்டன

இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கமுயூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்த்திட, அதிலும் குறிப்பாக பாசஞ்சர் ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடைபெறுவது, சுதந்திர இந்தியாவில் இதுதான் முதன்முறை. நூறாண்டுகளுக்கும் மேலாக நன்குக் கட்டமைக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு ...

Read More »

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்பு.

சு. வெங்கடேசன் எம் பி 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நித்தி அயோக் அறிவித்த அதே வழித்தடங்களில் இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும் .35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள். இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகள் ஆக இருக்கும். ...

Read More »

பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்             பொது மேலாளர் அவர்கள்,             தென்னக ரயில்வே,             சென்னை – 600 003. அன்புடையீர், வணக்கம். பொருள்:-     பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோருவது தொடர்பாக… கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் இரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர் இரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு இரயில் ...

Read More »

தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் சென்றவர்களை நமது மாநிலத்திற்கு அழைத்து வருவது – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ள தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பாக…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     ஊரடங்கின் காரணமாக தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் –  தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக வெளிமாநிலம் சென்றவர்களை நமது மாநிலத்திற்கு அழைத்து வருவது –  வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ள தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பாக… ஊரடங்கு ...

Read More »

பட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி…

உண்மையை அப்பட்டமாக்கும் தென்னக ரயில்வேயின் விளக்கம்சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு மத்திய பட்ஜெட்டில் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிக்கை குறிப்பொன்றினை (510/2019-20) வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங்களைச் சொல்லி அவைகள் அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் 7000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று ...

Read More »