Tag Archives: rss terror

கல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சரவை, புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள வளர்ச்சித்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசாங்கங்களும் ...

Read More »

மருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டுமெனவும், அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு சட்டத்தின் படி இம்மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பிரதான அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தன. இதன்படி தமிழ்நாட்டிலிருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமானம், பட்டியலினத்தோருக்கு ...

Read More »

பெரியார் சிலை அவமதிப்பு – சிபிஐ(எம்) கண்டனம்

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் காவி சாயம்  ஊற்றி சென்றுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.   கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கோழைகள்தான் இக்காரியத்தை செய்வார்கள். மதவெறி சக்திகளும். சங்பரிவார் போன்ற அமைப்புகளும் இத்தகைய பிற்போக்குத்தமான காரியத்தை தொடர்ந்து செய்து வருகின்றன. பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பாஜக வின் எச்.ராஜா  பேசியது, பெரியார் சிந்தனைகள் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் நீட்சியும் தொடர்ச்சியுமே ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »

மாட்டின் பேரால் நடக்கும் கொலைகள்

2016 ஆகஸ்ட் மாதம் – மாட்டின் பெயரால் வன்முறைகள் அதிகரித்ததை கண்டித்து பிரதமர் மோடி பேசினார். ஆனால் அது வெறும் வாய்ச்சவடால் என்பதும், பாஜக ஆளும் மாநிலங்களிலேயே வன்முறையாளர்களை ஒடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் கீழ்க்காணும் கொடூர உண்மைகள் நிரூபிக்கின்றன. செப் 2015 – முகமது அக்லக், விமானப்படை வீரனின் தந்தை அடித்துக் கொலை. (தாத்ரி) அக்டோபர் 2015, ஜாகித் ரசூல் பாட் என்ற 16 வயது இளைஞன், கால்நடை ஏற்றிவந்த ட்ரக் வாகனத்தின் மீது வீசப்பட்ட குண்டுக்கு இறையானார். (உதம்பூர்) அதேபோல ...

Read More »

தன் அலுவலகத்திற்கு தானே குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள்…

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அமைதியான சமூகத்தில் வேர் பிடிக்கவும் முடியாது வளரவும் முடியாது.எனவே அமைதியான எந்த சமூகத்தையும் அமைதியற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவும் மாற்றுவதன் மூலமாகவே வேர் பிடிக்கிறது. இதுதான் இந்தியா முழுவதும் வளச்சிக்காக அவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை. இதற்கு இன்னொரு உதாரணம் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக வெடிகுண்டு நிகழ்ச்சி. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இரவில் தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ஒரு குண்டு வெடித்தது. அதற்கு ஒருமணி நேரம் முன்னதாக தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு ஆட்டோவில் வெடிகுண்டு ...

Read More »