Tag Archives: RSS

வடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று நீதிமன்றத்தில் கூறிக்கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், தில்லிக் காவல்துறை ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் தில்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்ட வர்கள் எண்ணிக்கையில் ஆழமான முறையில் தவறு இருப்பதைத் தங்கள் ...

Read More »

சாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனசங்க காலம் முதல் முழங்கி வந்துள்ளதமிழகத்தில் சாதிய அணி திரட்டல்கள்நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது கவலையளிக்கிறது. சாதிய அமைப்பு முறையை எதிர்த்து கேள்வி எழுப்பிய சித்தர்கள் காலம் துவங்கி, சமூக சீர்திருத்த முன்னோடிகள், கம்யூனிஸ்ட் இயக்கம், திராவிட இயக்கம் என தொடர்ந்து போராடிய தமிழகத்தில் சாதியஅணிதிரட்டல்களும், சாதிய அமைப்புகளின் செயல்பாடும் அதன் விளைவால் ஏற்படும் சாதிய மோதல்கள், ஆணவப் படுகொலைகள் அனுதினமும் அரங்கேற்றப்படுகின்றன. அனைத்து சாதிகளையும் சரிக்கட்டும் கழகமாக… சமீபத்தில் அதிமுக கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்ட ...

Read More »

ராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…

முதலமைச்சர் பொறுப்பிலிருக்கும் தங்களுக்கு ஆயிரம் வேலைகள் ஒவ்வொரு நொடியிலும் காத்திருக்கும். எனவே, தங்கள் வேலைகளை துறை வாரியாக பகிர்ந்தளித்திருப்பீர்கள். அது தவிர்க்க முடியாதது. அதேசமயம் உங்கள் பெயருடன் வரும் அறிக்கைகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பாவீர்கள். நேற்றைய தினம் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் அவர்கள் காலமானதையொட்டி தாங்கள் அஞ்சலி ஒன்றை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அஞ்சலிக் குறிப்பில் அவர் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இருக்கிறீர்கள். வரலாறு அறிந்த வரையில் இது முற்றிலும் தவறான செய்தி. சங்பரிவார் அமைப்பின் பல்வேறு தரப்பினர் இதுபோன்று தங்கள் தலைவர்கள் ...

Read More »

‘நமோ டிவி’ செலவினைமறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம்நடவடிக்கை எடுக்குமா?தலைமைத் தேர்தல்ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுதில்லி, ஆக. 18- ‘நமோ டிவி’ செலவினை மறைத்த பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: முதலில், பீகார் சட்டமன்றத் தேர்தலில், 64 வயதுக்கு மேம்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்குரிமை அளிக்கும் முடிவை கிடப்பில் போட்டிட, முடிவெடுத்திருப்பதற்கு எங்கள் ஏற்பளிப்பினைத் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும், வாக்காளர்களை நேரடியாக சரிபார்க்கும் கொள்கையை உத்தரவாதப்படுத்துவதே, ...

Read More »

கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுக!மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக! இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஆக.3- கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்தை இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன. இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் ...

Read More »

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ...

Read More »

மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ...

Read More »

கல்வியைமத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும்மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மத்தியத்துவப்படுத்தியிருப்பதையும், மதவெறி அடிப்படையில் மாற்றியிருப்பதையும் மற்றும் வணிகமயப்படுத்தி இருப்தையும் கடுமையாக எதிர்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சரவை, புதிய கல்விக் கொள்கையை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதற்கும், மத்திய மனிதவள வளர்ச்சித்துறையின் பெயரை மாற்றியிருப்பதற்கும் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கல்வி, நம் அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இருக்கிறது. இப்போது மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசாங்கங்களும் ...

Read More »

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி தெரியாத மோடி அரசு மக்கள் மீது முரட்டுத் தனமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதனன்று இணைய வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது: 2020 ஜூன் 1 அன்று, மத்திய அரசாங்கம், முன்பு அறிவித்த நிதித்தொகுப்புகளுடன், மேலும்20 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதித் தொகுப்புகளை ...

Read More »