Tag Archives: Social Media

பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திரைக்கலைஞர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானதையொட்டி எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்ற கருத்துடைய சிலர் அவரது குழந்தையை முன்வைத்து பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டுள்ளனர். உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்து தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ ...

Read More »

கூலிக்கு ஒப்பாரி வைக்கும் தாய், மகனின் மரணத்திற்காக அழ முடியாததைப் போன்ற ஊடகத் தொழிலாளர்களின் நிலை…

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது பெண்களுக்குப் பக்கத்தில் அமர்வதற்கு வாய்ப்பு தேடி இடம் கிடைக்காமல், என்னருகில் வந்து அமர்ந்தார் ஒரு அம்மா. அவராகவே என்னிடம் பேச்சு கொடுத்தார். நான் என்ன வேலை செய்கிறேன் என்று கேட்டார். இப்படி சென்று கொண்டிருந்த பேச்சு, அவருடைய வேலை குறித்து திரும்பியது. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஒப்பாரி பாட்டு பாடுவேன் என்றார். இறந்தவர்கள் வீடுகளுக்கு அழைப்பார்கள், இப்போதெல்லாம் அதையும் ரெக்கார்டு பண்ணிட்டாங்க. ஒரு இடத்தில் ரெக்கார்டு பண்ணிட்டு அதை ...

Read More »

ஜோதிகாவை இழிவுபடுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…

விருது வழங்கும் விழா ஒன்றில் திரைக்கலைஞர் ஜோதிகா பேசியதை, அண்மையில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. தஞ்சாவூருக்கு படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவலமான நிலையைக் கண்டு தாம் வருந்தியதாகவும், கோவில்களுக்கு செலவு செய்து பராமரிப்பது போல அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளையும் பராமரிக்க வேண்டும் என்ற பொருளில்தான் அவர் பேசியுள்ளார். ஆனால், அவருடைய பேச்சை முன்னும் பின்னுமாக வெட்டி திரித்து அவர் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டது போல சிலர் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது பேச்சை முழுமையாக கேட்கும் ...

Read More »

ஆனந்த் டெல்டும்பே, கவுதம் நவ்லகா கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீமா கொரேகான் பிரச்சனையில் முற்றிலும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆனந்த் டெல்டும்பே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. கோவிட்-19 தொற்று காரணமாக உச்சநீதிமன்றம் இவர்கள் கைது செய்யப்படுவதை ஒத்தி வைக்காதது கவலைப்படத்தக்க விஷயமாகும். ஆனந்த் டெல்டும்பே, சாதி மற்றும் ...

Read More »