Tag Archives: state govt

கொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு! முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் ...

Read More »

இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-  இ-பாஸ் நடைமுறை – ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு கைவிட வலியுறுத்துவது – நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்தை படிப்படியாக அமலாக்க வேண்டியது குறித்து:  1. இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்             தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாவட்டம் ...

Read More »

ஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு மத்தியக்குழு முடிவுகளை விளக்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

அயோத்தி: அறக்கட்டளை அதன் வேலையைச்செய்யட்டும்மத்திய, மாநில அரசுகளுக்கு அதில் வேலையில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

புதுதில்லி, ஆக.3- அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் அறக்கட்டளை செய்யட்டும் என்றும், மாறாக ‘பூமி பூஜை’ செய்யும் பணியை மாநில நிர்வாகமோ, மத்திய அரசாங்கமோ இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அயோத்தி தாவா, இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தம் மூலமாகவோ, அல்லது, நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பம் ...

Read More »

மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ...

Read More »

பிஎம் கேர் நிதியம்: வெளிப்படையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பிஎம் கேர்ஸ் நிதியம் என்ற தனியார் அறக்கட்டளை வசூல் செய்து குவித்துள்ள நிதி குறித்து பொது மக்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் அலுவலகம், பிஎம் கேர்ஸ் நிதியம் சார்பில் வசூலித்துள்ள தொகை குறித்த விவரங்களை வெளிப்படுத்திட பிடிவாத மாக மறுத்து வருவது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அதிருப்தி கொள்கிறது. பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை ...

Read More »