Tag Archives: Sterlite Issue

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றியே  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

20.12.2018 பெறுநர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை- 600 009. வணக்கம். பொருள்; தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கும் தொழில்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் தொடர்ச்சியாக கேடு விளைவிப்பதால் நிரந்தரமாக மூட தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற கோருதல் சம்மந்தமாக… 1997 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது என்பதாலும், தாமிரம் உற்பத்தி ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமியற்ற வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியது வருமாறு; ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் துத்துக்குடியின் சுற்றுச்சூழலும், மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரிடம் மனு ...

Read More »