Tag Archives: Sterlite

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றியே  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

ஸ்டெர்லைட் ஆலை:  தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்! தமிழக அரசே! ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு  சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக! சுற்றுச் சூழலை பாதித்து மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டம், அதை ஒட்டி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, கொடுமையான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் பின்னணியில் தான், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. அதை ரத்து செய்யுமாறு ...

Read More »

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்து மே 22 ஆம் தேதி மக்கள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். அப்போது அங்கு காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பின்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூட உத்தரவிட்டது. பின்னர் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தேசிய ...

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிடுக

24.9.2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 2 தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த சிபிஐ விசாரணையை உடனே துவங்கிடுக தூத்துக்குடி துப்பாக்கி ...

Read More »

துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா?

துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பு துணை வட்டாட்சியர்களா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழக அரசு முயற்சி கடந்த 22-5-2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்த போது  அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

Read More »