Tag Archives: Supreme Court

மருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…

மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. டிஜிட்டல் யுகத்தில் விண்ணப்பங்களை பெற்றுவிட்டோம் அது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் நடந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். அரசு நினைத்தால் ...

Read More »

பாபர் மசூதி இடிப்பு வழக்கு; கயவர்களை குற்றமற்றவர்கள் என்றிருக்கிறது நீதித்துறை

லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பாபர்மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேர்களையும் விடுதலை செய்து அளித்துள்ள தீர்ப்பு, நீதியை கேலி செய்யும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அளிப்பதற்காக 28 ஆண்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் கூட நீதி வழங்கப்படவில்லை. மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அங்கே நின்று அந்தக் கிரிமினல் நடவடிக்கைக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்த பாஜக-விஎச்பி-ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்புக்கு சதி செய்த குற்றச்சாட்டில் அப்பாவிகள் என்று நீதிமன்றம் கண்டிருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் ...

Read More »

இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சிபிஐ (எம்) மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (11.02.2020) நிறைவேற்றப்பட்ட தீர்மானம்… உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓ.பி.சி, எஸ்.சி., – எஸ்.டி., மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்கு பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ...

Read More »

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக!

ஸ்டெர்லைட் ஆலை:  தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: பொதுமக்களுக்கு ஏமாற்றம்! தமிழக அரசே! ஆலையை நிரந்தரமாக மூட நடப்பு  சட்டமன்றக் கூட்டத்திலேயே அவசர சட்டம் இயற்றுக! சுற்றுச் சூழலை பாதித்து மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் நடத்திய தொடர் போராட்டம், அதை ஒட்டி நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, கொடுமையான மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் பின்னணியில் தான், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. அதை ரத்து செய்யுமாறு ...

Read More »

அவதூறு வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் சிபிஐ(எம்) வரவேற்பு

ஜனநாயகத்தின் குரல்கள் தடையின்றி ஒலிக்கட்டும் அவதூறு வழக்குகள் தொடுக்கப்படும் பிரச்சனையில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது  முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் அதிமுக அரசிற்கு விழுந்த சாட்டையடியாக இது அமைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியின் தவறுகளை விமர்சிப்போருக்கு எதிராக, கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. பத்திரிக்கையாளர்கள், எதிர் கட்சித் தலைவர்களின் குறைந்தபட்ச விமர்சனங்களைக் கூட சகித்துக் கொள்ளாத போக்கே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணையின் பேரால் ஏற்படுத்தும் அலைக்கழிப்பு உட்பட பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகும். ...

Read More »