Tag Archives: Tamilnadu CM

கொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு! முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் ...

Read More »

இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை கைவிடுக – பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தொடங்கிடுக – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-  இ-பாஸ் நடைமுறை – ஞாயிற்றுக் கிழமை முழுஊரடங்கு கைவிட வலியுறுத்துவது – நிபந்தனைகளுடன் பொதுப்போக்குவரத்தை படிப்படியாக அமலாக்க வேண்டியது குறித்து:  1. இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்             தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் மாவட்டம் ...

Read More »

நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை. திறந்த நீதிமன்ற விசாரணைக்கும் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று தொழில் செய்து வருமானம் இழந்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் ...

Read More »

தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்

பெறுநர்           மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பிணை வழங்கப்பட்டும் சட்ட விரோதமாக தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோருவது தொடர்பாக:- ***             இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இசுலாமியர்கள் மீது, தமிழகத்தில் 15 காவல்நிலையங்களில் பதிவு ...

Read More »

அனைத்து பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் சமைத்த மதிய உணவு வழங்கிட தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பெறுநர்       மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,       தமிழ்நாடு அரசு,       தலைமைச் செயலகம்,       சென்னை – 9. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். பொருள்:-        அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்குவது – இந்த கல்வி ஆண்டில் கல்வி அளிப்பது  குறித்து ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்துரையாடி முடிவு செய்வது – பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உடனடியாக விநியோகிப்பது தொடர்பாக:             “கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் ...

Read More »

மக்களைக் காக்கும் ஆக்கப்பூர்வமான பணியில் முதல்வர் ஈடுபட வேண்டும்!

அராஜகமான எதிர்நிலை மனோபாவத்தை கைவிட்டு, கொரோனா பரவலை தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கவும், ஊரடங்கால் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Read More »