Tag Archives: thirunelveli

தென்காசி, வீரகேரளம்புதூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற குமரேசன் மரணம்!

சிபிசிஐடி விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! தென்காசி, வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர்  27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு முழுக்க, முழுக்க வீரகேளம்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவாக நடந்ததுள்ளது என உயிரிழந்த குமரேசனின் தந்தை நவநீதிகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள புகாரில், 8.5.2020 அன்று ஒரு இடப்பிரச்சனை சம்பந்தமாக வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு வரசொன்னதன் பேரில் குமரேசனும், அவரது தந்தையும் காவல்நிலையம் சென்றதாகவும், விசாரணையின்போது காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குமரேசனை  தாக்கியதாகவும் ...

Read More »

பார்பரம்மாள்புரம் தலித் மக்கள் மீதான தாக்குதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டக்குழு கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள பார்பரம்மாள்புரம் பதைக்கம் காலனியை சார்ந்த வேல்முருகன், சுபாஷ், சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பதைக்கம் காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வீணடித்தும், மாசுபடுத்தியும் வந்த குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந்த் மூவரையும் பதைக்கம் காலனியை சார்ந்த தலித் மக்கள் தண்ணீரை பாழடிக்காதீர்கள் என்று சொன்னதற்காக ...

Read More »

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலை சித்ரவதையால் வாலிபர் குமரேசன் மரணம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 8 தென்காசி மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அனுப்புநர்: நவநீதகிருஷ்ணன் (வயது 55/2020) த/பெ. ஆதிமூலம் 5, ஹைஸ்கூல் தெருவீரகேரளம்புதூர் தென்காசி மாவட்டம் அலைபேசி எண்: 9677590708 தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25/2020) காவல் துறையினரின் தாக்குதலால் உள்ளுருப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 27.6.2020 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது இறப்பு முழுக்க முழுக்க வீகேபுரம் காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவால் நடந்ததுள்ளது. கடந்த 10.6.2020 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ...

Read More »

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் ...

Read More »