Tag Archives: Thoothukudi

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை தொடரும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ; மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு !!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் இருக்கிற மக்கள் நடத்தி வந்துள்ள போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றியே  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இன்றைய தீர்ப்பாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.  சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை தொடரும் என தெரிவித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல கட்டங்களாக அந்த பகுதி மக்கள் போராடி ...

Read More »

மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை- கொலை வழக்காக மாற்றுக!

ஆறுமாத காலத்திற்குள் வழக்கை முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் – சிபிஐ (எம்) கட்சி வலியுறுத்தல்!! சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சுயமாக முன்வந்து  விசாரணை நடத்தியது. அவ்விசாரணையின் இறுதிகட்ட உத்தரவு நேற்று (30.6.2020) வெளியிடப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தினுடைய இந்த உத்தரவு சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்களையும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் மிகத் துல்லியமாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

Read More »

குற்றமிழைத்த காவலர்களை காப்பாற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ முயற்சிப்பதா? மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சாத்தான்குளம் காவலர்களால் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருடைய மரணம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டுள்ளது. எந்த குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாத அப்பாவி வியபாரிகளை காவல்நிலையத்தில் அடித்துக்கொன்ற இச்சம்பவத்தில் குற்றம் புரிந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்கிற குரல்கள் தமிழகத்தில் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல்,  தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர், குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கோடு அறிக்கைகளும் பேட்டிகளும் அளித்துள்ளது வன்மையான ...

Read More »

சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு நாளை (26.06.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் காவல் துறையினரின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு நாளை (26.06.2020) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்தில்  இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.  நடந்த சம்பவம் இரண்டு மனித உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம் என்றே கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் காவல்துறையின் அதிகார அத்துமீறல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு புனைதல், பாலியல் வன்முறை, சாதியக் ...

Read More »

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சட்டவிரோதமாகதுன்புறுத்தப்பட்டு,சித்ரவதைசெய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்வழக்கில் கடும் நடவடிக்கை எடுத்திடுக

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறையினரால் ஜெயராஜ் (வயது 60), பென்னிக்ஸ் (வயது 31) ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  ஜெயராஜ் நடத்துகிற  செல்போன் கடையை  சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மூடச்சொன்ன பிரச்சினையை ஒட்டி, அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார்கள். இவ்வாறு காவல்நிலையத்திற்கு கொண்டு போகும் முன்பு உச்சநீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் சொல்லியுள்ள படியோ அல்லது நடைமுறை சட்டங்களின்படியோ என்ன வழக்கிற்காக ஜெயராஜை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்கின்றோம் என்கிற ...

Read More »