Tag Archives: tn govt

டெல்டா மற்றும் பெரும்பகுதி மாவட்டங்களில் கனமழை; நஷ்டஈடு வழங்கவும், கடனை தள்ளுபடி செய்யவும் சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையினால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. மற்றும் வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் மொத்தத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கர் ...

Read More »

தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க!

கடந்த 18.11.2020 அன்று தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் உதவிப் பொறியாளர்களுடைய அடிப்படை ஊதியத்தை 15,600/- ரூபாயிலிருந்து 9,300/- ரூபாயாக குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது. 2010ம் ஆண்டு அரசுத் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவர்கள், வழக்கறிஞர்களுக்கு இணையாக பொறியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ. 15,600/-ஆக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. இதர பல்வேறு அரசு ஊழியர்களுக்கு ஊதிய அதிகரிப்பு செய்து ஊதிய முரண்பாடுகளை ...

Read More »

கலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். இந்தியா முழுமைக்கும் அவர்கள் யாத்திரை நடத்துகிற போது வழி நெடுக இந்திய மக்களின் குருதியும் சதைகளும் கொட்டிக்கிடந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு அவர்களே குண்டு வைத்தது, திருப்பூரில் தன் சொந்த கட்சிக்காரரின் தற்கொலையை அரசியல் ...

Read More »

தோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக! – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தோழர் தொல் திருமாவளவன் ஒரு இணையவழி கருத்தரங்கில் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பேசியதற்காக சங் பரிவார் அவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. மனுஸ்மிருதியில் சமூகத்தின் பல்வேறு ஒடுக்கப்பட்ட பகுதியினரைப் பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன. மனித இனத்தை சாதிப்பாகுபாட்டிற்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் அடங்கிச் செல்வதை மனுஸ்மிருதி வலியுறுத்துகிறது. இத்தகைய காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்களின் மீது தொடர்ச்சியான விமர்சனங்களை வைப்பதன் மூலமே நாகரிகம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழக காவல்துறை அரசமைப்பு சட்டத்தின்படி நடப்பதற்கு பதிலாக, சமீப காலமாக சங் பரிவாரின் ஆட்டுவிப்புக்கு இணைந்து ...

Read More »

தனுஷ்கோடியின் மரணத்துக்கு அரசின் செயலின்மையே காரணம்.

சு.வெங்கடேசன் எம் பி மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினைக் கையாள்வதில் செயலின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. பலமுறை எடுத்துக்கூறியும் அதனைப் புரிந்து கொள்ளாத நிலை தொடர்கிறது. கடந்த ஒன்றாம் தேதி முதல், சோதனையை அதிகப்படுத்தப் பலமுறை கூறியும் கேட்காததன் விளைவை இன்று மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது பிரச்சனை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பரவும் வேகமானது 7.9% இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோசனையை வழங்கியுள்ளேன். கடந்த 24ஆம் தேதி சிறப்புக் ...

Read More »

நோய் தொற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது நோய் தொற்று அதிகமாக உள்ளது என அனைவரும் வற்புறுத்தியதன் பேரில் அதனை கணக்கில் கொண்டு ஜூன் 15ம் தேதி அரசு ஒத்தி வைத்தது.ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களைவிட நோய் தொற்று மிக மோசமாக பரவி வருகிறது. சாவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலேயே நோய்த்தொற்று அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகையால் இந்த தேர்வுகளை இப்போது நடத்த வேண்டாம் என அனைவரும் ...

Read More »