Tag Archives: TNgovt

விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை ...

Read More »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களி கட்டணத்தை குறைத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்                 மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,                 தமிழ்நாடு அரசு,                 தலைமைச் செயலகம்,                 சென்னை – 600 009. பொருள்:- சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு – இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு கல்வி தொடர வாய்ப்பளிக்க கோருவது தொடர்பாக: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 2013-2014ம் ஆண்டில் அதிக கட்டணம் (ரூ. 5.54 லட்சம்) தீர்மானிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு கட்டணங்களை ...

Read More »

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்கள் உள்ளிட்டு காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுக!! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணிகளில் காலியிடங்கள் அதிகம் உள்ளன. இதனால் குறைந்த அளவு ஊழியர்களை வைத்துக் கொண்டு நுகர்வோர்களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய முடியவில்லை. இருக்கின்ற ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும் ஏற்பட்டது. எனவே, களப்பணியிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டுமென கோரி மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இதன் விளைவாக மின்சார வாரியம் 10,000 கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்தது. அதற்காக 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உடற் தகுதி தேர்வும் மற்றும் எழுத்துத்தேர்வும் நடத்தி, 15,000 ...

Read More »

காய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக !

பண்டிகை காலம் நெருங்கி வரும் பல காரணங்களால் வெங்காய விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் காய்கறி விலைகளும் உயர்ந்திருக்கின்றன. கொரோனா தொற்றின் காரணமாக பெருளாதாரமும், தனி மனிதர்களின் வருமானமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மிகப்பெரும் சுமையாக ஏழை,எளிய , நடுத்தர மக்களை பாதிக்கும். எனவே, உரிய முன்னெச்சரிக்கையுடன் வெங்காயம் உட்பட காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அறிவிப்புகளாலும், ஆணைகளாலும் மட்டும் விலைவாசியை குறைத்துவிட ...

Read More »

பேக்கேஜ் டெண்டர்களை ரத்து செய்திடுக உள்ளாட்சி மன்றங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி மன்றப்பிரதிநிதிகள் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்றார்கள்.  மத்திய அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு 14-வது நிதி ஆணைக்குழு பரிந்துரை அடிப்படையிலான 2019-2020 ஆண்டிற்கான நிதியை அனுப்பியிருந்தது. ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை தேவையான பணிகளுக்கு திட்டமிட்டு மன்றக்கூட்டங்களில் முடிவு செய்து நிறைவேற்றிடும் அதிகாரம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி ஊராட்சி மன்றங்களுக்கே உள்ளது. ஆனால்,  ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இந்த நிதியை மாவட்ட நிர்வாகமே பேக்கேஜ் டெண்டர் விட்டு அமலாக்கிட மாநில அரசு மாவட்டங்களுக்கு அரசாணை அனுப்பியது. இதனடிப்படையில் ...

Read More »

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட – தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- கொரோனா நோய்த் தொற்று – பரவாமல் கட்டுப்படுத்துவது – கொரோனா மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் – அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள கோருவது தொடர்பாக:             தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி தென்மாவட்டங்கள் உள்பட பெரும்பகுதியான மாவட்டங்களில், நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ...

Read More »

கொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு! முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் ...

Read More »

ஆக.20-26 மாபெரும் மக்கள் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2020 ஜூன் 30 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு மத்தியக்குழு முடிவுகளை விளக்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...

Read More »

நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கறிஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் 24ந் தேதி முதல் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் முழுமையாக செயல்படவில்லை. திறந்த நீதிமன்ற விசாரணைக்கும் அனுமதி தரவில்லை. இதனால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று தொழில் செய்து வருமானம் இழந்து தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் ...

Read More »

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ...

Read More »