Tag Archives: tnpolitics

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்…

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ...

Read More »

மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லையா? க.கனகராஜ்

தமிழகம் மின்மிகை மாநிலமா? அதிமுக அரசில் மின்வெட்டே இல்லை என்பது உண்மையா? அமைச்சர் தங்கமணியின் கருத்து உண்மையா? நேற்று 20.7.20 தமிழகத்தின் மாண்புமிகு மின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட மூன்று விசயங்களை பிரதானமாக முன்வைக்கிறார். 1. மார்ச் – ஜீன் மாதங்களில் மின்கட்டணக் கணக்கீட்டில் குழறுபடிகள் ஏதுமில்லை. அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை. 2. கடந்த பத்தாண்டுகளில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மின்வெட்டே இல்லை. 3. தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. இந்த மூன்று ...

Read More »

நெடுஞ்சாலைத்துறையில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கணக்கான டெண்டர் பணிகளை நிறுத்தி வைத்து – அந்நிதியை கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திடுக!

தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) கடிதம் பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-  கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு – மருத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுவது – பல விமர்சனங்களுக்கு மத்தியில் திட்டமிடப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை நிறுத்தி வைக்கக் கோருவது தொடர்பாக:             தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி ...

Read More »

தமிழக காவல்துறை இயக்குநருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுதல் காவல் துறை இயக்குனர் அவர்கள் காவல்துறை தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம் பொருள்: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தை சார்ந்த விவேக்கும் சாவித்திரியும் காதலர்கள் – இருவரும் கோயமுத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவல் துறையினரால் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது – அனுப்பி வைத்த நான்கு நாளில் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்க பட்டது – இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது – குளித்தலை காவல்துறையினரை வழக்கில் ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை!

இந்தியாவின் “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மருந்து சரக்குகளை அமெரிக்காவிற்கு அனுப்பிய பின், தமிழகத்திற்கு வரவிருந்த சோதனை உபகரணங்கள் அமெரிக்காவிற்கு வழிமாற்றிவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து இந்தியா “ஹைட்ராக்சி க்ளோரோக்கின்” மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை, அரசாங்கத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் அது மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டது என சப்பைக் கட்டு கட்டினார்கள். அனால் இன்று அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ள உக்கிரம், அப்படிப்பட்ட மனிதாபிமானத்தை நாம் திரும்பி எதிர்பார்க்க முடியாது என்பதை தெளிவாக்குகின்றது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரியப் போர் காலத்து அமெரிக்க சட்டமான “பாதுகாப்பு உற்பத்தி ...

Read More »

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு பதில் அளிக்க மறுப்போம்! மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில் சொல்வோம்! நாடு முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் - சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்...

Read More »

தோழர் ஏ.அப்துல் வஹாப் மறைவுக்கு அஞ்சலி

தமிழகத்தில் மார்க்சிய இயக்கத்தின் வளர்ச்சிக்கு மகத்தான பங்காற்றிய தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

Read More »