Tag Archives: Viluppuram

விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை ...

Read More »

நவீனா குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் உதவித் தொகை

ஒரு தலைக் காதலால் கொல்லப்பட்ட விழுப்புரம் நவீனா குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் உதவித் தொகை வழங்கிட தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் விழுப்புரம்,  வி.பாளையத்தைச் சேர்ந்த அங்கப்பன் – நாகம்மாள் இவர்களின் மூத்த மகள் நவீனாவை(17), அப்பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்த இந்திரா நகரைச் சேர்ந்த செந்தில் (32) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். செந்திலின் காதல் தொல்லையால் சிரமத்துக்கு உள்ளான நவீனா தனது  பள்ளிப்படிப்பை நிறுத்த நேர்ந்துள்ளது. இந்நிலையில் நவீனாவை காதலித்த செந்தில் கடந்த ஜூலை 29 அன்று ...

Read More »

மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் அமைச்சரை பதவி நீக்கி விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். ஹோமியோ மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் மாணவிகள் சரண்யா, மோனிஷா, பிரியங்கா ஆகிய மூவரும் 23.1.2016 அன்று கைகள் கட்டப்பட்டும், உடம்பில் காயங்களோடும் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்துள்ளனர். அரசு அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரியில் முறையான வகுப்பறைகள், பரிசோதனைக் கூடங்கள், கழிவறைகள் உள்ளிட்டு எவ்வித வசதியும், பாதுகாப்பும் இல்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த சில நாட்களிலேயே பல ...

Read More »