போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை உடனே வழங்குக!

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு பிப்ரவரி மாத ஓய்வூதியத்தை உடனே வழங்குக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !!

பிப்ரவரி மாத ஓய்வூதியம் கோரி  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் மண்டல அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி முதலே மாதாமாதம்  போராடியே ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் 1-ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஓய்வூதியம் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை. ஓய்வு பெறுகிற போது வழங்கப்பட வேண்டிய எந்தவித பணப்பயனையும் கொடுக்காமல் ஓய்வூதியத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருந்த நிர்வாகம் தற்போது அதையும் நிறுத்தி விட்டது.  ஓய்வூதியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை மட்டும் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கியிருக்கிறது. ஆயினும், மாதாமாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த ஓய்வூதியத்திட்டம் உருவாக்கப்படும் போது சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகள் இந்த திட்டம் நிறைவேறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், போக்குவரத்து கழகங்களுக்கும் உள்ளது என்ற உறுதிமொழியை பெற்றார்கள். ஆனால் போக்குவரத்து கழகங்களுக்கும், தமிழக அரசும் இந்த பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு உரிய முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாகவே இப்போதைய ஓய்வூதிய நிறுத்தம். இதையெல்லாம் கவனத்திற்கொண்டு இந்த ஓய்வூதிய பிரச்சனையை முழுமையாக தீர்க்கும் வகையில் அரசும், போக்குவரத்து கழகங்களும் நிரந்தர நிதியொன்றை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அதுவரையிலும் தமிழக அரசு நிதிநிலையில் அறிவித்துள்ள  மாணவர்கள் மற்றும் இதர இலவச பயனாளிகளுக்கான மானியத்தொகையை உடனடியாக போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கி இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

– ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு! சிபிஐ(எம்) வரவேற்பு! முழுவெற்றி பெற தொடர்ந்து போராடுவோம்!

மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதமான இடங்களை மத்திய தொகுப்புக்கு ஒன்றிய அரசு எடுத்து கொண்டது. இந்த இடங்களுக்கு ...