காரணத்தை விளக்குங்கள், ஆளுநருக்கு சிபிஐஎம் வலியுறுத்தல் …

முடிவெடுக்க தாமதம் ஏன்?

ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

வறட்சி, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பற்றாக்குறை, நீட் தேர்வா? இல்லையா என்ற நிச்சயமற்ற தன்மை, ஆதார் அட்டை இணைக்கவில்லையென்றால் ரேசன் பொருட்கள் கிடைக்காது என்ற நிர்பந்தம்  என தமிழக மக்கள்  கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் செயல் இழந்து கிடக்கின்றன.

 

கடந்த 5ம் தேதி முதல் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் மிகக்கடுமையானது.  ஆனால், ஆளுநர் இந்தப் பிரச்சனை ஆரம்பித்த பிறகு தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு போனதும், வந்த பிறகும் கூட அமைதி காப்பதும் ஏற்கத்தக்கதல்ல. தமிழக மக்கள் சந்திக்கும் கடுமையான பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒருவாரம் கடந்த பின்பும் எந்த முடிவும் எடுக்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகக்கூடிய  கொந்தளிப்பு நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் மத்தியில் விளக்குவதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார். எனவே, உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை தமிழக மக்களுக்கு ஆளுநர் விளக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...